தமிழகத்தில் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதாவது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணம் நீண்ட காலமாக பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இவற்றை பதிவு செய்வதற்கு தற்போது தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 898 தம்பதியரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவற்றை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
