நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விஜய் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி மூலம் நீங்கள் ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன்.

எனவே நீங்கள் தங்களது பள்ளிக்கு நிச்சயம் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற ஆட்சியர் துர்கா மூர்த்தி நேற்று ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு விஜய் படிக்கும் வகுப்பறைக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது ஆட்சியர் துர்கா மூர்த்தி அந்த மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.

மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப் போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை படித்த ஆட்சியர் மாணவனை பாராட்டிய அவருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். அப்போது மாணவன் ஆட்சியரிடம் நீங்கள் போட்டி தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஆட்சியர் ஆங்கிலத்தில் எழுதினேன் என்று கூறினார்.

ஏன் தமிழில் எழுத முடியாதா? என்று மாணவன் கேள்வி கேட்க, தாராளமாக தமிழில் நமது தாய் மொழியில் எழுதலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார் இது தொடர்ந்து மாணவர்கள மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர் நீங்கள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சாதனையாளர்களாக வர வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார் மேலும் அந்த மாணவனுக்கு ஒரு புத்தகத்தை பரிசாக வழங்கினார்