கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல் அருகே உள்ள பகுதியில் ஷீலா என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்த பிறகு வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது பத்துகானி அரசு உண்டு உறைவிட பள்ளியில் தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு மது என்ற கணவரும், சபரீஷ், சக்திவேல் என்ற 2 மகள்களும் உள்ளனர். இவரது கணவர் ரப்பர் பால் வெட்டும் வேலை பார்த்து வருகிறார். சபரீஷ் 12ம் வகுப்பும், சக்திவேல் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பழங்குடியின பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய அருமை பற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
