இந்தியாவும், அமெரிக்காவும் சமீப காலமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமெரிக்கா தனது நாட்டின் விவசாய பொருள்கள் மற்றும் பால் பொருள்களுக்காக இந்திய சந்தை திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனால் தான் ஒப்பந்தம் இறுதியாவதில் தாமதமாக கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் அறிக்கை ஒன்று தற்போது வெளியாகியுள்ள நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அமெரிக்காவின் பால் பொருள்களுக்காக இந்திய சந்தை திறக்கப்படுமெனில் இந்தியாவில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெருதளவில் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு அந்த அறிக்கையில் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பால் பொருள்களுக்காக மானியம் வழங்கப்படுவதால் அவை இந்திய சந்தைகளில் எளிதாக ஊடுருவ முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனால் இந்தியாவில் பால் விலை 15 % குறையும் நிலையில் கால்நடை வளர்ப்போருக்கு மட்டுமே 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், அதனால் கிராமப்புற மக்களின் கால்நடை வளர்ப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் இருந்தது. மேலும் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.