இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் திருடன் ஒருவர் ஒரு கடைக்குள் புகுந்து அங்குள்ள பெண்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி திருடன் முயற்சி செய்கிறார். இதனை பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் கடையில் உள்ள மற்ற பெண்களை வெளியே அனுப்பி கடையின் வெளியே பூட்டு போட்டு போடுகிறார். இதையடுத்து அங்கு வந்த திருடன் கதவை திறக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து தான் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து கதவை நோக்கி சுடுகிறார்.

 

இருப்பினும் அவரால் கதவை திறக்க முடியவில்லை. அதன் பின் அவர் ஓடிவந்து கதவை உடைக்க முயற்சி செய்கிறார். அதுவும் பயன் அளிக்கவில்லை. அதன் பின்  வெளியிருந்த மக்களிடம் அவர் முட்டி போட்டு கெஞ்சுகிறார். ஆனால் அவர்கள் உதவவில்லை.  அங்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கி முனையில் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.