ஈராக்கில் உள்ள அல் குட் நகரில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் மாலில் சிக்கி உள்ளனர். இதுவரை தீ விபத்தில் சிக்கிய 50 பேர் உடற்கருகி பலியான நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களும் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த தீ விபத்தில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் 48 மணி நேரத்திற்கு பிறகு தான் விரிவான தகவல்களை கூற வேண்டும் என தகவல் வெளிவந்துள்ளது.