கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விபான்சிகா மணியன் (32). இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நித்திஷ் என்பவரிடம் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விபான்ஷிகா ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜ்யாவுக்கு குடி பெயர்ந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் வைபவி என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், கணவனின் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி வந்தனர்.
இதில் நிதிசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அதோடு நித்திஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சற்று கருப்பாக இருப்பதால் தன்னுடைய மனைவி அழகாக தெரியக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துள்ளனர். அதோடு நாளுக்கு நாள் அவர்களின் தொல்லை அதிகமானதால் அந்த பெண் தன்னுடைய மகளுடன் வேறொரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நிதீஷ் அவருக்கு விவாகரத்து கேட்டேன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாளைக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து வந்த நிலையில் திடீரென அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகள் தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பாக தன்னுடைய மகளை அவர் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கேரள போலீஸாரிடம் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் நிதீஷ் அவருடைய சகோதரி மற்றும் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
