ஒடிசா மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் படிபந்து சாஹு(81), சாந்தி சாஹு(72) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிமன்ஷா(55) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ஆட்டோ டிரைவரான இவர் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். மதுபோதைக்கு அடிமையான இவர் வீட்டிற்கு போதையில் வருவதால் அவரது மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வசித்து வருகிறார். இதை அடுத்து ஹிமன்ஷா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போதும் அவர் மது குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார்.
இதனால் பெற்றோருக்கும் ஹிமன்ஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் நேற்று வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து பெற்றோரை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் இரவு முழுவதும் உயிரிழந்த பெற்றோரின் அருகே படுத்து உறங்கி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஹிமன்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையின விசாரணை நடத்தி வருகின்றனர்.
