இன்றைய காலகட்டத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் நாய் ஒன்று பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில் பாம்பு ஒன்று மெதுவாக வீட்டுக்குள் நுழைகிறது. அதனை பார்த்த வீட்டிலிருந்த நாய் உடனடியாக பாம்பை சென்று தாக்கியது. அதில் தலைப்பகுதியை கடித்து இழுத்த நிலையில் பாம்பு வலி தாங்க முடியாமல் தப்பிக்க முயற்சி செய்தது. ஆனாலும் நாய் அதை விடாமல் இரண்டாக கடித்து உயிரிழக்க செய்தது.

 

View this post on Instagram

 

A post shared by G H O S T 😈 (@lone_wolf_warrior27)

இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாயின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதில் ஒருவர் “இப்படி ஒரு தைரியமான நாய். உண்மையில் விசுவாசத்தின் ரூபம்” என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார். மேலும் இந்த சம்பவம் “நாய் என்பது மனிதனின் உண்மையான நண்பன்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.