இணையத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் சேவையாற்றி வந்த பேரன், தனது பாட்டி, தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால், எதையும் கூறாமல், “அமேசான் டெலிவரி” வேடம் அணிந்து வீட்டின் கதவை தட்டுகிறார்.
வீடியோவில், பாட்டி கதவைத் திறக்கும் தருணத்தில் பேரனைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் தரையில் விழுகிறார். அந்த கணத்தில் பாட்டியின் கண்களில் தோன்றும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, அர்ப்பணிப்பு எல்லாம் இகாண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
Grandmother falls to the floor after her grandson in the military surprises her after being away for two years.
“POV: Your brother comes back from the military after being away for 2 years disguised as an Amazon guy to surprise our grandparents.”
Amazing.… pic.twitter.com/tP7TesS4JS
— Collin Rugg (@CollinRugg) July 13, 2025
இந்த வீடியோவை TikTok பயனர் “annaliseryan9” மற்றும் X-ல் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது தான் உண்மையான பாசம்”, “பாட்டியின் முகபாவனையிலேயே பேரன் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதை உணரலாம்” என உணர்வுப் பூர்வமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இது போன்ற வீடியோக்கள், குடும்ப பாசத்துக்கும் உணர்வுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக, இராணுவ சேவையில் இருக்கும் உறவினர்களை மீண்டும் காணும் அந்த தருணம், ஒருவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாகும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
