உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த சாஹில் என்ற சிறுவன், பொதுவெளியில் தெருவோர மந்திர வித்தைகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்து வருகிறான். அவனிடம் ஒரு சிறிய இரும்பு கிண்ணம், மந்திரக்கோல், நாணயம் மற்றும் ஒரு சிறிய சிவப்பு நிற பந்து மட்டுமே உள்ளன. இந்த எளிய பொருட்களைக் கொண்டு, பந்துகளைக் காற்றில் மறையச் செய்வது, ஒரு கிண்ணத்தில் இருந்து மற்றொரு கிண்ணத்திற்குப் பந்தை மாற்றுவது, பார்வையாளர்களின் காது மற்றும் மூக்கிலிருந்து நாணயங்களை எடுப்பது போன்ற வியப்பூட்டும் வித்தைகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவன் செய்து காட்டுகிறான்.
Yeh ladka bahut talented hai.
Kya woh abhi bhi Nainital ki sadkon par kaam kar raha hai?
Main na sirf uski padhai mein madad karna chahta hoon, balki jaadu mein uski dilchaspi ko bhi badhava dena chahta hoon.
Kyon na woh duniya ke behtareen jaadugaron mein se ek bane?
Kya… pic.twitter.com/lju2LokTBj
— anand mahindra (@anandmahindra) June 5, 2026
சிறுவன் சாஹிலின் இந்த அசாத்திய திறமையும், சுற்றியுள்ள மக்களைத் தன் பேச்சால் ஈர்க்கும் இயல்பான பாணியும் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, சிறுவனின் அசாத்திய திறமையையும், கலை நயத்தையும் மனதாரப் பாராட்டியுள்ளார். மேலும், அந்த சிறுவனின் எதிர்கால வளர்ச்சிக்கும், அவனது கலைத்திறனை மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
