சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 9987 ரூபாய்க்கும் ஒரு சவரன் 79896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 127000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.