சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மரண வழக்கில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டி.எஸ்.பியாக இருந்த சண்முகசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டி.எஸ்.பியாக நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அஜித் குமார் மரண வழக்கை முதல்வர் ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய நிலையில் இன்று சிபிஐ விசாரணை தொடங்கப்பட இருக்கிறது. இன்று சிபிஐ விசாரணை தொடங்கப்பட இருக்கும் நிலையில் புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
