தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். பாஜகவினர் கூட்டணி ஆட்சி என்று கூறும் நிலையில் அதிமுகவினர் தனித்து தான் ஆட்சி என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் விருதுநகரில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் நயினார் நாகேந்திரன் நேற்று கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்த நிர்வாகிகளிடம் கள நிலவரம் பற்றி அவர் கேட்டபோது ஒருவர் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து பேசினால் உங்களுக்கு சோறு கூட போடுகிறோம் ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டோம் என்று சொல்வதாக ஒரு நிர்வாகி கூறினார். உடனடியாக அதிர்ச்சி அடைந்த நயினார் நாகேந்திரன் கேமரா முன்பு இப்படியா சொல்வீங்க என தலையில் அடித்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக நயினார் நாகேந்திரன் கட்சியில் தன்னை யாரும் மதிப்பதில்லை என்றும் போன் போட்டால் கூட தன்னை யாருன்னு தெரியாது என சொல்வதாக ஆதங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தொண்டர் ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்வதாக சொன்ன வீடியோ பிரபல சன் நியூஸ் தொலைக்காட்சியில் போடப்பட்டுள்ள நிலையில் இதோ அந்த வீடியோ,