தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இரண்டாவது மாநில மாநாட்டை நடிகர் விஜய் மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மதுரையில் மாநாடு நடத்தினால் வெற்றி வாய்ப்பு திட்டம் என்ற ஒரு சென்டிமென்ட் தமிழக அரசியலில் இருப்பதாகவும் அதனால் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு செய்தி பரவுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிவந்தால்தான் தெரியும்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல் முறையாக அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழக அரசியல் களத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து களம் காண்கிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் நடிகர் விஜய் மதுரையில் மாநாடு நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் மதுரை மண்ணை மிதித்தால் வெற்றி கிடைக்கும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். மக்கள் எழுச்சியாக வந்தால்தான் வெற்றி கிடைக்கும். மேலும் காசு கொடுத்து அழைத்து வந்தால் வெற்றி கிடைக்காது என்று கூறினார்.
