தமிழக அரசு பள்ளிகளில் வகுப்பறை மேம்பாட்டு முயற்சியாக “ப” வடிவ இருக்கை அமைப்பை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து, முன்னாள் தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள கருத்தில், “இது முதன்மை தேவையா? தமிழகத்தில் பல கிராமப்புற பள்ளிகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “பல்வேறு அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ‘ப’ வடிவ இருக்கைகள் மட்டுமே முன்னுரிமை என தெரிவது அரசின் சிந்தனைக்கே கேள்விக்குறி எழுப்புகிறது.
அரசு வகுப்பறையில் பிழை தீர்க்காமல், மருத்துவ ரீதியாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும். தொடர்ந்து கழுத்தை திருப்பி பேசும் சூழல் மாணவர்களுக்கு கழுத்து வலி, பார்வை கோளாறு போன்ற உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்” என மருத்துவராகவும் தனது பங்கு உணர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் “ப” வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான
ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும் எங்கேயோ பார்த்து…— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) July 13, 2025
“>
மேலும், கேரள சினிமா மூலம் வந்த காணொளி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை மாற்றும் முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறிய தமிழிசை, “அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும், புதுமையான டிஜிட்டல் வசதிகள் மற்றும் தெளிவான கற்றல் முறை கொண்ட வகுப்பறைகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
“விளம்பர அரசாக அல்ல, அடிப்படை மேம்பாட்டு அரசாக செயல்படுங்கள்” என்ற அவரது உருக்கமான கோரிக்கை தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
