தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் சென்று வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று அடிக்கடி மிரட்டியிருககிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் சதீஷ் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீதான வழக்கு தற்போது தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான சதீஷ்க்கு 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதமாக ரூ. 10000 விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர வாதாடிய வழக்கறிஞர் ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டுக்கள் தெரிவித்தார்.