
இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வனவிலங்குகள் தொடர்பான ஆபத்தான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர், தண்ணீரில் அமைதியாக இருந்த முதலையின் வாலை மெதுவாக இழுத்து கேலி செய்கிறார். முதலில் அமைதியாக இருந்த முதலை திடீரென வேகமாக திரும்பி அவரை தாக்க முற்பட்டது.
View this post on Instagram
ஆனால் அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் இது “துணிச்சல் அல்ல…. முட்டாள்தனம்” என்றும், இன்னொருவர் “விலங்குகளுடன் விளையாட கூடாது… ஒரு தவறே உயிரை இழக்கும்”என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ மீதான விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் , உயிர் மீது பயமில்லாமல் சிலர் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக உயிரை பணயம் வைத்து வருவது தொடர்பாக கவலையையும், சிந்தனையையும் தூண்டும் விதமாக உள்ளது.