தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி. தலைமையில் கோவில்பட்டி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்து கொண்டு இருந்தனர். அதில் கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ்(42) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
உடனே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் போலீசார் சாமுவேல் ராஜா மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூன்று கிலோ கஞ்சாவையும் மதுவிலக்க அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சாமுவேல் ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
