தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி(75). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரும்பூர் பகுதியில் வைத்து ஜெயபால்(65) என்பவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மூக்காண்டி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதத்தின் காரணமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். வழத்தின் விசாரணை தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயபாலுக்கு 10 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கினை சிறப்பாக புலனாய்வு செய்த குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் இந்த வழக்கில் வாதாடி குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த வழக்கறிஞருக்கும் மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்.