அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கடந்த சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அவர் பொய்யான சொத்து விவரங்கள் கூறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது தெரியவந்தது. இதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.