விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2026-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜயின் மாநாட்டிற்கு பிறகு எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியாகத்தான் போட்டியிடுவோம் என கூறி வருகிறார்.

அதிமுக கட்சி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் 2026 தேர்தல் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது; தேசிய தலைமை, மாநிலத் தலைமையுடன் சேர்ந்து முடிவெடுக்கும் எனகட்சி நிர்வாகிகளுக்கு, தமிழ்நாடு பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.