நியூசிலாந்தில் 22 வயதுடைய இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வயதாங்கி உடன்படிக்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான நியூஸிலாந்தின் ஆளும் கட்சியான ஏ.சி.டி கட்சி முன்மொழிந்தது. நேற்று இதற்கான வாக்கெடுப்பிற்கு நியூசிலாந்து பார்லிமென்ட் அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி வைதாங்கி உடன்படிக்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வர வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகள் ஆனோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த இல்லம் எம்.பியா\ன ஹனா ரவ்ஹிதி மாவோரிகளின் நடனமாடி அந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நடனம் ஆடிய போது மொத்த அரங்கமும் அதிர்ந்தது. அது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
History made in New Zealand’s Parliament! 🇳🇿 Māori MP Hana-Rawhiti Maipi-Clarke, just 22, sent shockwaves through the room, tearing up a bill and leading a powerful haka that brought the entire space to a halt. As the room erupted in Māori pride, non-Māori could only watch in… pic.twitter.com/bLYcNcXpZe
— SyncInAi (@thecoreside) November 15, 2024
