முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விழுப்புரம் கோலியனூரில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டத்தில் முதல்வர் பற்றி தரக்குறைவாக பேசியதாக அரசு தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்ய கோரி சிவி சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கண்ணியத்தோடு பேச வேண்டும்.
அந்த காலம் கிடையாது. அடுத்த தலைமுறை பார்த்துக் கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான். ஆனால் அதில் கண்ணியம் தேவை. மனுதாரர் சி.வி சண்முகம் சாதாரண ஆள் போல பேசக்கூடாது. அவர் சட்டம் படித்தவர். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அவதூறாக பேசியதாக ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 22ஆம் தேதி ஓத்தி வைத்துள்ளார்.
