மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளி முடிந்து ஐந்து அரசுப் பள்ளி சிறுவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, ரோட்டோரம் இருந்த சாக்கடைக்குள் குட்டி நாய் ஒன்று விழுந்து தவிப்பதைக் கண்டுள்ளனர். உடனே துரிதமாகச் செயல்பட்ட அந்தப் பிஞ்சு குழந்தைகள், தங்களது ஸ்கூல் பேக்குகளை மற்ற சக மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, ஒரு சிறுவனும் சிறுமியும் சற்று யோசிக்காமல் அந்தச் சாக்கடைக்குள் இறங்கியுள்ளனர்.
சாக்கடையில் தவித்துக் கொண்டிருந்த குட்டி நாயை பத்திரமாகத் தூக்கி வெளியே விட்டு அந்த உயிரைக் காப்பாற்றினர். பின்னர், தங்களது வாட்டர் கேனில் வைத்திருந்த தண்ணீரைக் கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவிவிட்டு, மிகுந்த சந்தோஷத்தோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அத்தனை உயிர்களையும் நேசி , அன்பு செய் 👏🏻❣️ pic.twitter.com/OGW81elGI5
— நெல்லை செல்வின் (@selvinnellai87) July 2, 2026
“>
பிஞ்சு நெஞ்சில் அசாத்திய அன்பு காட்டிய இந்த அரசுப் பள்ளி குழந்தைகளின் செயல் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
