தமிழக அரசை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார். தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக அசோக்குமார் மீது சென்னை போலீசார் மூன்று கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போளீசார் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில், அசோக்குமார் இந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மூன்று நாட்களாக போலீசார் தேடி வரும் நிலையில், இந்த மனுவின் மீது உயர்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
