தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவரை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் திருச்செந்தூர் ஆத்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுக்கு வந்த போது அவரை போலீசார் அங்கு வைத்து அதிரடியாக கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் இது தற்போது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
