கோர்டோபா பகுதியில் உள்ள ஒரு பொது வீதியில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் சில நொடிகளில் வன்முறையான கத்திச் சண்டையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் ஒருவரின் கைபேசியைத் திருடிவிட்டதாகக் கூறி, அந்த நபர் தனது துணையிடம் கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் தொடங்கியுள்ளது.இந்தக் கொடூரமான காட்சியைப் பல குடிமக்கள் நேரில் கண்டு வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

இருவரும் கத்திகளை ஏந்தியபடி மிரட்டிக்கொண்டிருந்தபோது, அந்தப் பெண் ஆணின் அடிவயிற்றின் பக்கவாட்டில் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார். காயம்பட்ட அந்த நபர், சிறிது தூரம் பின்வாங்கிவிட்டு, பின்னர் தனது ஹெல்மெட்டைக் கழற்றி அந்தப் பெண்ணை ஹெல்மெட்டால் அடித்து, பலமுறை உதைத்துள்ளார்.

அதற்குப் பதிலடியாக அப்பெண் நாற்காலியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி அவரது பைக் அடித்து நொறுக்கியும்‌ இருவரும் தரையில் விழுந்து ஒருவரையொருவர் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டனர்.

 

“>

படுகாயமடைந்த அந்த நபர் தன் துணைக்கு எதிராகப் புகார் அளிக்க மறுத்தபோதிலும், கைபேசியின் உண்மையான உரிமையாளர் புகார் அளித்ததால், திருட்டு கைபேசியை மீட்ட போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.