இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் இருக்கும் நிலையில் இந்த வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என்று கருதப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறிவொளி மற்றும் தன்னார்வ நடவடிக்கைகளுக்கான சமூகம் என்ற தன்னார்வ அதமைப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தது. அதாவது குழந்தை திருமணம் தொடர்பாக மனு தொடர்ந்துள்ள நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு குழந்தை திருமணம் தொடர்பாக எடுத்த ஆய்வில் தமிழகம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கிறது. மத்திய அரசின் ஆய்வின்படி கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 8966 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதேப்போன்று கர்நாடகாவில் 8,348-ம், மேற்கு வங்காளத்தில் 8324, தெலுங்கானாவில் 4,440, ஆந்திராவில் 3416, அசாமில் 3316, மகாராஷ்டிராவில் 2043, குஜராத்தில் 1206, உத்திரபிரதேசத்தில் 1197, ஹரியானாவில் 1104 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது.

இப்படி ஏராளமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ள நிலையில் குறைந்த அளவுக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களிடையே சென்றடையவில்லை என்று அந்நிறுவனம் கூறியது. மேலும் இதற்கு சுப்ரீம் கோர்ட் குழந்தை திருமணம் தொடர்பாக அரசு நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என கூறி வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.