குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தில்நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசியதாவது, இன்று காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கு பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரஸ்காக தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். தற்போது காங்கிரஸ்சின் இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது.
அதேபோன்று காங்கிரஸும் பாகிஸ்தானின் ரசிகராக உள்ளது. இப்போது பாகிஸ்தான் மற்றும் காங்கிரசுக்கு இடையேயான கூட்டு அம்பலமாகியுள்ளது. நாட்டை ஒற்றுமையாக நாங்கள் முனைப்புடன் செயல்படும்போது காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கவில்லை. எனக்கு தற்போது ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது. வருகிற 2047-ம் ஆண்டுக்கு நாம் 100-வது சுதந்திர நாளை கொண்டாடும்போது இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். மேலும் இதற்காக நான் இரவு பகல் பாராமல் உழைப்பேன். இது என்னுடைய உத்தரவாதம் என்று கூறினார்.
