
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டி.ராஜேந்தர், எனது மகன் சிம்புவின் பிறந்த நாளை எங்களுடைய ரசிகர் மன்ற தோழர்கள்….. தென்சென்னை மாவட்டம் சார்பாக நேற்று ராத்திரி கொண்டாடுறாங்க. இலக்கியாவோட மகன், சிலம்பரசன் உடைய மருமகன், என்னுடைய பேரன் ஜேசன் வச்சு கேக் வெட்டுகிறான். இந்த பிறந்த நாளை கொண்டாடுறான்.. என் பையன் கேக் வெட்டி கொண்டாடலையே தவிர, என் பையன் ஏன் கொண்டாடல ?
அவர் வாழ்க்கையில் இன்னொரு ஸ்டேஜ் ஏறனும். இன்னொரு வெற்றி கொடியை பார்க்கணும். அதற்காக நான் பண்ணிட்டு, ரசிகர்களை சந்திக்கிறேன் என்று சொல்கிறார். அது நல்ல கருத்தா எனக்கு பட்டது. அதனால என் பேரன் கேக் வெட்டினான், கேக் வெட்டி கொடுத்துட்டு வந்துட்டேன்… இன்னைக்கு காலைல இந்த அன்னதானம் பண்ணுவதற்கு வந்திருக்கிறேன், இதுதான் மேட்டரு…
இதுல என்னென்ன கேட்டாக்கா… தப்பு நடந்தா அத தடுக்கணும்…. அதுக்காக குரல் கொடுக்கணும்… அப்படின்னு சொல்லிட்டு, அப்படின்னு நினைச்சா அதுலாம் ஒரு ஸ்டேஜ். இப்ப அது ஒரு ஏஜ். இப்ப என்னால இயன்ற வரைக்கும் தர்மம் கொடுக்கணும், தானம் கொடுக்கணும். இது ஒரு ஸ்டேஜ் . ஆனால் அதற்காக இப்போ ஒரு ஏஜ். என்னன்னு கேட்டாக்கா… அன்னைக்கு எல்லாம் தடாலடி தடாலடி அப்படியெல்லாம் இருந்த ராஜேந்திரன் அப்படின்னு சொன்னால்,
அது ஒரு ஸ்டேஜ்.. இன்னைக்கு இருக்கிற ஸ்டேஜ்ல இயன்ற வரைக்கும் பண்ணனும் தானம்… எந்த அளவுக்கு வேணுமோ, அந்த அளவுக்கு இருக்கணும் நிதானம்… வாழ்க்கையில இந்த ஆத்மாவுக்கு வேணும் நல்ல சமாதானம். அந்த சமாதானத்தை பெற வேண்டும் என்று சொன்னால், வாழ்க்கையில் என்ன தானம் கொடுத்தாலும், அன்னதானத்தை போல ஒரு சிறந்த தானம் இருக்க முடியாது.
ஏன்னு கேட்டா இறைவன் மீறி எதுவும் கிடையாது…. இந்த பட்டம், பதவி, இந்த பகுசு, இந்த பெயர், இந்த புகழ், இந்த காசு, இந்த பணம், இந்த சொத்து, இந்த சுகம், இந்த சொந்தம் ,இந்த பந்தம், இது எதுவுமே மனுஷன் போகும் போது கூட வராது.. நாம சேர்த்து வைத்த புண்ணியமும், அந்த புண்ணியத்தை விட்டுட்டு நீங்க பாவம் செத்தால் பாவம் தான் வரும் என பேசினார்.