
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டி.ராஜேந்தர், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிச்சு. சென்னையில ஆர்கேநகர்ல போய் என் வட சென்னை ரசிகர் மன்றத்தை வச்சுட்டு, STR ரசிகர் மாற்றத்தை வச்சுக்கிட்டு, அகில இந்திய ரசிகர் மன்றத்தை வச்சுக்கிட்டு, இன்னைக்கு அகில இந்திய ரசிகர் மன்றத்தின் சார்பாக தம்பி வாசு வந்திருக்கிற மாதிரி…. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் மாதிரி போனேன். ஆர்கே நகர்ல என்னுடைய உடல்நிலை எல்லாத்தையும் மீறி 500 பேருக்கு அரிசி 5 கிலோ… 5 கிலோ நல்ல அரிசி எடுத்து என் கையால கொடுக்குறேன்.
எதுக்கு ? என் முகத்தை காட்டிப்பேன்ன்னு இல்ல. நான் மக்களுக்கு கொடுப்பேன், கொடுக்கணும். ஆர்கே நகர்ல கொடுத்தேன். அங்கிருந்து போய் தூத்துக்குடியில் கொடுக்கிறேன்.. தூத்துக்குடியில காத்து வசதியே இல்ல… இப்ப கூட இங்கே பேசணும், சத்தம் வருதுன்னு பேனை ஆஃப் பண்ணிட்டாங்க… காத்து வசதி இல்ல... உங்களுக்கு ஃபேன் ஓடுது… எனக்கு பேன் இல்ல, ஆனால் என் FANS இருக்கிறார்கள்... இது போதும் எனக்கு…. இந்த மாதிரி காத்து, புழுக்கம், தூத்துக்குடியில் 500 பேருக்கு கொடுத்தேன்.
அப்ப அப்படியே அந்த புழுக்கம் தாங்காம மயங்கி கீழே விழுந்தேன். ஆனா எழுந்திருச்சு, தண்ணி தெளிச்ச உடனே எந்திரிச்சு, மறுபடியும் கொடுத்து பிரஸ்மீட் கொடுக்கிறேன்… அடுத்து திருநெல்வேலில போய் 500 பேருக்கு அரிசி கொடுக்கிறேன்… கன்னியாகுமரில மறுநாள் போய் அரிசி கொடுக்கிறேன்… இதை தொடர வேண்டும்.. இனி தானம் பண்ணனும், தர்மம் பண்ணனும் என்பதற்காக தான் இன்னைக்கு என் பையனுடைய பிறந்தநாள் ஒட்டி,
இன்னைக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம்… அது நல்ல விதத்துல பிரிப்பர் பண்ணி, பிரியாணி போடனுன்னா… நல்ல மட்டன் போட்டு, பிரியாணி போட்டு, கூட ஸ்வீட் கொடுத்து, எல்லாம் கொடுக்குறேன், கொடுக்குறோம்… நானும் என் மனைவியும், என் தம்பியும், எங்கள் ரசிகர் மன்ற தோழர்களும், இதுல வேலை செய்ற யாரு ? எங்களுடைய ரசிகர் மன்ற தோழர்கள்….. தென்சென்னை மாவட்டம் சார்பாக நேற்று ராத்திரி கொண்டாடுறாங்க என பேசினார்.