
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி தமிழ்நாடு முழுக்க எப்பொழுதும் போல, மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு தபால் கார்டு அனுப்புகின்ற நிகழ்ச்சி நடத்த போறோம் என நாடு முழுக்க முன்மொழி கல்வி திட்டம்….
நமோதயா பள்ளிகள் தமிழகத்திலே துவக்கப்பட வேண்டும்…. நம்முடைய தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே தமிழகத்தினுடைய கல்வி தரும் மோசமாக இருக்கிறது. நேற்றைய தினம் ஸ்டாலின் சொல்லுகிறார் நாங்கள் இரு மொழி கல்வி கொள்கைதான் என்று சொல்லுகிறார்…
இரு மொழி கல்வி கொள்கையால் என்ன பயன் இந்த நாட்டிற்கு ? ஒரு பயனும் இல்லை. எனவே இந்த பிற்போக்குத்தனமான….. இதையெல்லாம் திமுககாரர்கள், அவர்கள் நடத்தக்கூடிய கல்வி நிறுவனங்களில் மத்திய பாடத்திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்….
இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள்… ஸ்டாலின் குடும்பத்தார் நடத்திக் கொண்டு இருக்கின்ற…. ஸ்டாலினுடைய மகள் செந்தாமரை நடத்தக்கூடிய சன் சயின்ஸ் பள்ளிகளில், இந்தி படித்து தான் ஆக வேண்டும். காசு கொடுத்து இந்தி படித்தாக வேண்டும். ஆனால் சாதாரண ஏழை எளிய மக்கள் இந்தி படிக்கக்கூடாது, இதுதான் இவர்கள் திட்டமாக இருக்கிறது. எனவே இந்து மக்கள் கட்சி சார்பிலே மும்மொழி கல்வி திட்டம் வேண்டி நாம் தபால் கார்டு அனுப்புகின்ற அந்தப் போராட்டத்தை இந்து மக்கள் கட்சியின் சார்பிலே நடத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.