அரவிந்த் கெஜ்ரிவால் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து சம்பவத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தான் சொன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி,  தமிழ்நாட்டில் துணை முதல்வர் வந்தால் என்ன ஆகும் ? துணை முதல்வர் என்பது  நாம் நியமிக்க போவது இல்லை. அவரை நியமிக்க போவது ஒரு குடும்பம் தான் நியமிக்கப்போகிறது.  அது வந்தால் என்ன ஆகும் ? என்று  அவர்களும்  ஏதாவது ஓர் ஆய்வு செய்திருப்பார்கள்.  என்னை பொறுத்தவரை துணை முதல்வர் என்று யரவையாவது அறிவித்தால்,  அந்த கட்சிக்கு நல்லது இல்லை என்பதுதான். ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு நல்லதாக இருக்கலாம்  தெரியவில்லை,  என்ன ஆகும் என்று…

ராமர் கோவிலுக்கு கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.  காங்கிரஸ் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு போகப் போவதில்லை என்று அழைத்த மூன்று தலைவர்களும் கூறி இருக்கிறார்கள்.காங்கிரசில் நிறைய பேர் போகப் போகிறார்கள்.  கர்நாடகா மாநில துணை முதல்வர் சிவகுமார்  35,000 கோவிலிலும் விசேஷ பூஜை நடக்கும்  இருக்கின்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் மினிஸ்டர் ஒருத்தர் நான் போவேன் என சொல்லி உள்ளார். RSS, பிஜேபி செஞ்சா என்ன ? அவுங்க தான் நல்ல காரியம் பண்ணியிருக்கிறார்கள். கோவில் கட்டுகிறார்கள். நாம் போனால்  என்ன தப்பு ? இந்த மாதிரி காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ராமர் கோவிலை புறக்கணிக்கும் கட்சியில் பிளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தான் தெரிந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.