
செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, அலையன்ஸ் விஷயத்தில் நான் எதுவுமே பேச முடியாது. அது டெல்லியில் இருந்து பேசுவார்கள். இல்லை என்றால், எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை பேசுவார். தமிழகத்தில் எதிர்க்கட்சி என்று நாங்க சொல்லிக்கொள்கிறோம். அது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது, அதான் சொல்கிறேன்.
ADMK பற்றி என்னால் பேச முடியாது. அந்த பொசிஷனில் நான் இல்லை. நான் கட்சி சார்பாகஅவ்வளவு விஷயம் பேச முடியாது. அது டெல்லியில் இருந்து பேசுவார்கள் அல்லது மாநில தலைவர் பேசுவார்.காயத்ரி ரகுராம் அதிமுகவின் இணைந்தது பற்றி ஒண்ணுமே நினைக்கல. ஒவ்வொரு தேர்தல் வரும் போது தேர்தலில் போட்டியிடுவேனா ? இல்லையா ? அதற்க்கு வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்வி என்னை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறது.
தேர்தலை பொருத்தவரைக்கும் எங்களுடைய கட்சித் தலைவர் நட்டாஜீயும், பிரதமர் மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும் என்ன முடிவெடுக்கிறார்களோ, அந்த முடிவு தான் என்னுடைய முடிவாக இருக்கும். எங்க கட்சி பொருத்தவரை எங்களுடைய ஒரே விருப்பம் 2024 இல் ஒரு மிகப்பெரிய வெற்றி பாஜகவிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக எங்களால் எந்த அளவிற்கு உழைக்க முடியும். பிரதர் மோடி அவர்கள் மீண்டும் வருவார், அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.; அதை தான் நாங்கள் சொல்லுகிறோம்.
400 இடங்களை தாண்டி பாஜக இருக்கும். அதற்காக எந்தளவுக்கு உழைக்கனும், என்ன வேலை செய்யணும் அதுதான் செய்வோம். யார் எங்கு போட்டியிடனும் என்பதை மேலிடத்தில் முடிவு பண்ணுவார்கள். அதில் எங்களுடைய விருப்பம் இருக்கா ? இல்லையா ? அது டோட்டலி இரண்டாவதாக இருக்கின்றது, அது முக்கியத்துவம் கிடையாது என தெரிவித்தார்.