
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, உங்க கண் முன்னாடி 70 ஆண்டு காலமாக கட்டிக் காத்த திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கண் முன்னாடி அழிய ஆரம்பித்துவிட்டது. காரணம் அந்த கட்சியில் competency ( திறமை ) இல்லை. இதை பி. டி ஆர் அண்ணா அப்பப்ப சொல்லுவாரு…. மாசம் மாசம் சொல்லுவாரு.
இந்த கட்சி இந்த மாதிரி போச்சுன்னா 10 பேர் கூட எம்எல்ஏவாக முடியாது. இந்த கட்சி இப்படியே போச்சுன்னா….. ரெண்டு பேர் கூட எம்எல்ஏ ஆக முடியாது…. அது DMKகாரனுக்கு பழகி போச்சு. அண்ணே எதோ மாசம், மாசம் மதுரையில் உளருறாரு…. விடுங்கப்பா… அவர் ஆருடம் சொல்கின்றார்.
இன்னைக்கும் பார்த்தீர்கள் என்றால் அவரும் மூன்றாவது தலைமுறை அரசியல்வாதி. அவருடைய தாத்தா PT ராஜன் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து, அவருடைய தந்தை எம்எல்ஏ, அமைச்சராக,,, சபாநாயகராக இருந்து….. இன்னைக்கு இவர் அமைச்சராக இருக்கிறார். மூன்றாவது தலைமுறை பி.டி.ஆர் அண்ணன் கொஞ்சம் எக்ஸ்போஷ்ல இருக்குறதால கண்டுபிடித்து விட்டார்.
டேய் இதே மாதிரி போனீங்கன்னா…. கவுத்துடுவீங்கடா நீங்க…. இதே மாதிரி போனீங்கன்னா…. கண் முன்னாடி இந்த கட்சியை கவுத்திட்டு தான் போவீங்க நீங்க என தெளிவா அப்பப்போ உணர்த்துகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஜனநாயக முறையில் இல்லாததால் அந்த கட்சி அழியப் போகிறது. பெரிய பெரிய கட்சிகள் இந்த உலகத்தில் அளித்துள்ளது. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் அழிந்து உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒன்னும் இல்லை என தெரிவித்தார்.