
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், DMKவை பொறுத்தவரை சந்தர்ப்பவாத, துரோக அரசியல். மாநில உரிமைகளை அடகு வைத்து…. தாங்கள் மட்டும் வளம் பெற்றால் போதும் என்ற அளவிற்கு தான் அவருடைய நிலைப்பாடு இருக்கிறதே ஒழிய, மாநிலத்தினுடைய சுயாட்சி எல்லாம் வெறும் வாயில் தான். மாநிலத்தின் சுயாட்சி என்பது வெறும் வாய் தான்.
”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் தலைவர் சொல்லுவார். நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிர்கள்.. வாய்தான் காது வரை உள்ளது என்று சொன்னார்… அது மாதிரி இந்த ஆட்சியாளர்களுக்கு காது வரை இருக்கிறது… எது பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஏமாந்த காலம் எல்லாம் போச்சு… இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழக சபாநாயகர் அப்பாவுவை பொறுத்தவரை மினிஸ்டர் ஆக வேண்டும் என்று ஆசை. இவ்வளவு தூரம் அவர் பேசுகிறார். ஸ்டாலினுக்கு நான் வேண்டுகோள் கொடுக்கிறேன்… தயவு செய்து அவரை மினிஸ்டர் ஆக்கி விடுங்கள். அதற்கு தான் பாவம் குழைத்துக் கொண்டே இருக்கின்றார். அவரை பொறுத்தவரை…. நான் தப்பாக சொல்லவில்லை. சில நேரத்தில் வார்த்தைகளை அப்படித்தான் வரும். அதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கம்பி கட்டுகிற கதை எல்லாம் சொல்ல வேண்டாம் என தெரிவித்தார்.