திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீண்ட இடைவெளிக்குப் பின் திருச்சியிலே பேசுகிற வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. சாதாரணமான ஒரு கொடி ஏற்றுகின்ற விவகாரம்….  அடுத்து ஒரு கருத்தரங்கு….  அவ்வளவு தான் என்று நான் வந்தேன்.

ஆனால் வந்த பிறகு கொடி ஏற்றுவதற்கு அவகாசம் கேட்க வேண்டியதாக இருக்கின்றது…  ஒரு 30 அடி ஏற்றிவிட்டு, மிச்சத்தை  நாளைக்கு வச்சுக்கலாமா ? என அமைச்சரிடம் கேட்டேன். அவ்வளவு தூரம்  இழுக்கணும்… அப்போ சாயங்காலம் வேணும்னா வச்சுக்கலாமான்னு நான் கேட்டேன்…..

இல்லை நாங்க இழுத்துருதோம்ன்னு சொன்னாங்க… அதனால் நான் சொன்னேன்…. இனிமேல் நீங்க கோடி ஏற்றணும்ன்னா….  முதல் 20 அடியை அண்ணன் ஏற்றுவார்….  மற்ற 25 அடி நாங்கள் ஏத்துவோம் என போடுங்க. அவரவருக்கு சான்ஸ் கிடைக்கும். 10 பேர் சேர்ந்து பிரிச்சி பிரிச்சி  எத்தலாம்.

100 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தை முதல் முதலாக நான் பார்த்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த கொடி….  வெயில் நேரத்தில் பட்டொளி வீசிப் பறப்பதை பார்க்கும் போதெல்லாம்…. இதயம் பலித்து விடும். ஆயிரம் கொடி இருந்தாலும்,  திமு கழகம்  கொடிப் போல ஒரு கம்பீரம் வேற எந்தக் கொடிக்கும் கிடையாது என தெரிவித்தார்.