நேற்று சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைய தினம் இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல்,  சென்னை மாநகரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக….  சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் புயல் அல்லது கனமழை குறித்து முன்னெச்சரிக்கை கூட்டங்கள் கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் நடத்தப்பட்டன. அண்ணா திமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக….

சென்னை மாநகரப் பகுதியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு  ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு,  அவர்களோடு கலந்து ஆலோசித்து….  புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்,  அந்தந்த மண்டலங்களுக்கு சென்று….

அங்கு இருக்கின்ற ஒவ்வொரு கோட்டத்திலும் உள்ள சாலைகளில் மக்களையும், அங்கு இருக்கின்ற  அதிகாரிகளும் கலந்தாலோசித்து….  அங்கு இருக்கின்ற மழை நீர் வடிகால் பகுதிகளை தூர்வார்தல்,  அடைப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதை நீக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்வதற்காக செயல்பட்டார்கள்.

அதனால் மழை பெய்கின்ற காலங்களில்,  தண்ணீர் தேங்காமல் வெளியில் சென்றது. இதனால் மக்கள் பாதிப்பு இல்லாமல் இருந்தார்கள். மழைநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்…. விடியா திமுக ஆட்சியில் நேற்றைய தினம் தான்,   மழை வெள்ள பாதிப்பு  இருக்கின்ற பகுதிகளுக்கு IAS அதிகாரிகள்  நியமிக்கப்பட்டது வேடிக்கையாக இருக்கின்றது என விமர்சனம் செய்தார்.