
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி,எனக்கு பஸ்ல கூட்டிட்டு போறது எல்லாம் கவலை இல்லை… சந்தோஷம் தான். பொதுமக்களோட நான் போனேன். எங்கேயோ தனியாக கூட்டிட்டு போனா… ஏதாவது பண்ணி இருப்பாங்க? இதுல பண்ண முடியாத சூழ்நிலை… அதனால பிரஸ் நீங்க தான்….. உதயநிதி கிட்ட போய் மைக்க புடிச்சு கேக்கணும்…
நீங்க பண்றது எல்லாம் சரியா ? முட்டைய புடிக்கிறீங்க…. BAN நீட் இது எல்லாம் தேவையா தமிழ்நாட்டுக்கு ? பேப்பர திருப்புறேன்….. திருநெல்வேலியில் பேப்பரை திருப்புறேன்….. 19, 20 கொலை… தமிழ்நாடு ரவுடிகளோடதா மாறி இருக்கு. இதெல்லாம் கண்ட்ரோல் பண்ணுறதுக்கு உங்களுக்கு திறமை இல்லை.
பொய் கேஸ் போட்டு… BJPகாரர்களை தடுத்து… பிஜேபி வளர்ச்சியை தடுக்க முடியும்னு நீங்க நினைச்சீங்கன்னா… அதைவிட கோமாளித்தனம் இந்த உலகத்துல எதுவுமே கிடையாது . நாங்க இன்னும் அசுர வளர்ச்சியில் BJP வளர போகுது… நீங்க பாருங்க 40க்கு 40 பி ஜேபி அடிக்க போகுது … முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், அவருடைய மகன் இளவரசன் உதயநிதி அவர்களுக்கும்…. ஒரே ஒரு வேண்டுகோள் தான்…
இப்பவே தயாராகிக்கோங்க.. ஒரு சீட் கூட நீங்க வரப்போவதில்லை…. உங்க தோல்வி பயத்தை என் அரஸ்ட் மூலமா நீங்க உணர்த்தி விட்டீர்கள்…. எங்களுடைய தொண்டர்கள் யாரும் தயங்க மாட்டாங்க.. நீங்க யாராவது ஜெயிலுக்கு போக தயங்குறீங்களா பாருங்க? அதெல்லாம் யாரும் தயங்க மாட்டாங்க. இந்த பூச்சண்டி வேலையெல்லாம் காட்ட வேண்டாம். எங்க தலைவர் கிட்ட கேள்வி கேட்குறீங்க, அதே மாதிரி உதயநிதி கிட்ட கேள்வி கேளுங்க… என தெரிவித்தார்.