செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து,  இன்னைக்கு 103 தொகுதிகளை கடந்திருக்கின்றது. கடைசியாக  திருச்சி வரை முடித்துவிட்டு,  தீபாவளிக்காக ஒரு நான்கைந்து நாட்கள் விடுப்பு எடுத்து இந்த யாத்திரை மறுபடியும் அரியலூரில் இருந்து இந்த யாத்திரை நடக்க இருக்கிறது.

அதன் பிறகு அரியலூர் முடிச்சு… திருச்சி புறநகர் முடிச்சுட்டு…. டெல்டா பகுதிக்குள் இந்த யாத்திரை சென்று விடும். பெரிய அனுபவம்… பெரிய எழுச்சி… எல்லா இடங்களிலும் கூட மக்களுடைய எதிர்பார்ப்பு…  நம்முடைய யாத்திரையில் சாதாரண பொதுமக்கள்…. எந்த கட்சியும் சாராதவர்கள் அதிக அளவில் இந்த யாத்திரையில் பங்கெடுத்து எல்லா இடத்திலும் கூட ஒரு ஆக்கத்தையும்,  ஊக்கத்தையும்….  பாரதிய ஜனதா கட்சிக்கம் ,  குறிப்பாக நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அளித்திருக்கின்றார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் நம்முடைய மத்திய அரசினுடைய ஆட்சி… அடித்தட்டு வரை சென்றிருக்கிறது…  குறிப்பாக ஒரு சாமானிய மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை….  ஒரு பாசிடிவ் சேஞ்சை…  நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய ஆட்சி ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இந்த என் மண், என் மக்கள் யாத்திரையில் எல்லா இடங்களிலும் கூட பார்க்க முடிகிறது.

இது நிச்சயமாக ஜனவரி கடைசிக்குள் இந்த யாத்திரை முடிக்க வேண்டும் என்பது எங்களுடைய ஆசை..  மழைக்காலமெல்லாம் தாண்டி…  பிப்ரவரி முதல் வாரத்திற்குள் இந்த யாத்திரையை முடித்துவிட்டு….  அடுத்து நம்முடைய லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக…. வருகின்ற அடுத்த இரண்டு மாதமும் கூட இன்னும் 131 தொகுதிகள் இருக்கிறது. அதை வேகப்படுத்தி முடிக்க வேண்டும் என்பது நம்முடைய தலைவர்களின்  விருப்பம். அதே நேரத்தில் நிறைய நிகழ்வுகளும் கூட இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்து இருக்கின்றது.