கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை இணைத்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியை விட, கொடுக்கும்போது எனக்கு தான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும். அதனாலதான், மருத்துவர் அறிவுரையை மீறி இந்த விழாவுக்கு வந்துட்டேன்.

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படணும்னு, தேர்தலுக்கு முன்னாடி சொன்னோம். அப்ப சிலர் சொன்னாங்க, என்ன சொன்னாங்கன்னா, இதெல்லாம் நிறைவேத்த முடியாத வாக்குறுதி. இவங்க ஆட்சிக்கு வரவே மாட்டாங்க. இத மாதிரி ஒவ்வொருத்தரும் நிறைய சொன்னாங்க, கட்டமெல்லா பாத்தாங்க.

ஆனா, நீங்க எல்லோரும் என்ன சொன்னீங்கன்னா, தி.மு.க. தான் ஆட்சிக்கு வரணும். தி.மு.க. சொன்னா நிறைவேத்தும். கலைஞர் மகன் ஸ்டாலின் தான் முதலமைச்சரா வரணும்னு, ஓட்டு போட்டு, பதிலடியும் தந்தீங்க. உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்.  இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னா, சொன்னத நிச்சயம் செய்வேன். அதுக்கு அடையாளமா தான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உதவி தொகை கொடுக்குறோம். அதனால் தான் உங்கள் முன்னால கொஞ்சம் கம்பீரமா நின்று கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.