செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் இன்று சொல்கிறார் இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணியாம். என்ன கொள்கை இருக்கு ? அங்கே 26 கட்சியும் ஒருமித்த கொள்கையோடா இருக்காங்க. பல்வேறு கொள்கை கொண்ட கட்சி எல்லாம் ஒன்றாக இருந்து இந்தியா   கூட்டணி வைத்திருக்கிறார்கள். பாரதிய ஜனதா மத்தியில் வரும்போதும் அமைச்சராக இடம் பெறுகின்றார்கள்.

காங்கிரஸ் மத்தியில் வரும்போதும் அமைச்சராக இடம் பெறுகின்றார்கள். அது என்ன கொள்கை ? இது என்ன கொள்கை ? கொளகைக்கும்  திமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. ஆட்சி அதிகாரத்திற்கு தான் சம்பதம். குடும்பத்தை சார்ந்தவர் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். சம்பாதித்த பணத்தை காக்க வேண்டும்.  இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை….

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு கருணாநிதி இருக்கும்பொழுதும் இப்படித்தான்…..  திரு ஸ்டாலின் இருக்கின்ற இப்பொழுதும் அப்படித்தான் செயல்படுகிறது… நாட்டு மக்களுக்கு இந்த கட்சியால்  எந்த நன்மையும்  கிடைக்க போவதில்லை.. அது குடும்ப கட்சி… கார்ப்பரேட் கம்பெனி…. கட்சியாக இருந்தால்  மக்களை பற்றி நினைப்பார்கள். அது கட்சி இல்லை.  அதனால்  குடும்பத்தை பற்றி தான் நினைக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவில் இடம் பெற்ற… திரு ஸ்டாலின் அமைச்சரவை இடம் பெற்ற திருபழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆக இருக்கும் பொழுது….. 30,000 கோடியை  வைத்துக்கொண்டு திரு.சபரீசன், திரு.  உதயநிதி ஸ்டாலினும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்றார்கள் என ஒரு நிதியமைச்சர் சொல்லுகிறார்.

சாதாரண ஆள் இல்லை…  திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்சர் சொல்லுகிறார் இது பொய்யா ?  இதுவரைக்கும் முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை. இப்படி கொள்ளை அடிப்பதற்கு….  கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்கு தான் இந்தியா கூட்டணி…. இந்தியாகூட்டணி என்று இவர் சொல்லி கொண்டு இருக்கிறார். இது  நிலைக்குமா ?  நிலைக்காதா ? என்று எதிர்காலத்தில் பார்த்தால் தெரியும் என தெரிவித்தார்.