செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , சோலாரா ஆக்டிவ் பார்மா பிரைவேட் லிமிடெட்.  இந்த நிறுவனம் கடந்த 4ஆம் தேதி அன்று ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு அதன் மூலம் 14 தொழிலாளர்கள்…  அது கணக்கு அவங்க சொல்றதுதான்… ஆனால்  எவ்ளோ பேரு பாதிக்கப்பட்டாங்கன்னு இதுவரைக்கும் தெளிவான ஒரு அறிக்கை கிடையாது. பேப்பர்ல வந்தத வச்சு சொல்றேன்.

16 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,  அவர்களில் சில பேரை  சென்னைக்கு கொண்டு போனதாக சொல்றாங்க. ஜிப்மர் மருத்துவமனையை  பொறுத்தவரையில் எல்லாவித வசதியும் இருக்கு. இந்தியா முழுவதும் சில பேர் ட்ரீட்மென்ட்க்கு இங்கு வராங்க. தமிழ்நாட்டில் இருந்து இங்கு வராங்க.  அப்படிப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஜிப்மர்.

ஆனால்  ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டிய அவசியம் என்ன ? முதல் கேள்வி…  இரண்டாவது இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து….  பொதுவாகவே பாத்தீங்கன்னா….  பொது மக்களுக்கு இடையூறு. இடையூறுன்னு சொன்னால்,  ஒன்னு நிலத்தடி நீர்,  சுற்றுச்சூழல் மாசுபடுதல். அதே மாதிரி அந்த நிறுவனத்துக்குள்ளவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை.

கடந்த ஆண்டு கூட இரண்டு பேர் இறந்ததாக தகவல் வந்து,  நம்முடன் மாநிலச் செயலாளர் சொல்லி இருக்காரு. அப்படிப்பட்ட நிலையில் இந்த தொழிற்சாலை இயங்க வேண்டுமா ? என்பதுதான் இப்பொழுது   கேள்விக்குறி.  குறிப்பாக தொழிற்சாலை சுற்றி இருக்கின்ற கிராமங்கள், பெரியகலாப் பேட்,  சின்னகலாப் பேட், கனகசெட்டிகுளம், பிள்ளசாவடி இந்த நான்கு கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கு.

2018ல்  கிரண்பேடி துணை நிலை ஆளுநராக இருந்த போது…   பொதுமக்களே புகார் கொடுத்து,  அவங்க ஒரு ஆய்வு மேற்கொண்டு,  அந்த ஆய்வின் அடிப்படையில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இருக்கு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இருக்கு. இதுக்கு உங்கள் கருத்து என்னன்னு சொன்னா அன்னைக்கு அந்த நிறுவனம் பதில் கூட சொல்லல…  ஊடகங்களில் நீங்க பார்த்திருப்பீங்க

அந்த மாதிரி ஒரு தான்தோன்றித்தனமாக எவரையும் மதிக்காமல்,  அந்த நிறுவனம் செயல்பட்டு இருக்கு. இன்னைக்கு இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கு இந்த பாஜக கூட்டணி அரசாங்கம் இன்னைக்கு புதுவையில் வாயை மூடி மௌனமாய் இருந்துட்டு இருக்கு இன்னைக்கு…  வாயை திறக்கல, வாயை  திறந்து இதுவரையில் அரசாங்க தரப்பில் ஒரு ஸ்டேட்மென்ட் …. இதுதான் நடந்தது ? இதனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டாங்க…

இந்த தொழிலாளர்கள் ஜிப்மரில் இவ்ளோ பேர் இருக்காங்க….  சென்னையில இவ்ளோ பேர் இருக்காங்க….  நாங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்…  அப்படின்ற மாதிரி ஒரு அறிவிப்பு கூட பாஜக கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளி வராதது  என்பது உண்மையிலேயே மக்கள் எல்லாம் ரொம்ப கடுமையான அதிருப்தியும்,  வேதனையும்,  கண்டனத்தையும் தெரிவிப்பது தான் இன்றைக்கு மக்களுடைய நிலைமை இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு வெளிப்படை தன்மையுடன்  இருக்க வேண்டும். மக்கள் விரோத…  சுற்றுச்சூழல் பாதிப்பு… நிலத்தடி நீர் பாதிப்பு …  உயிருக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு தொழிற்சாலைக்கு முட்டுக்கட்டை இந்த பாஜக கூட்டணி அரசாங்கம் போட வேண்டிய அவசியம் என்ன ? இன்னைக்கு மக்கள் கேள்வி கேட்டு இருக்காங்க. இன்னைக்கு மக்கள்  எதிர்பார்ப்பது என்ன ?  அந்த கம்பெனியை மூடனும்…  ஆனால் தொடர்ச்சியா பாத்தீங்கன்னா….  கிட்டத்தட்ட லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள்.

கிட்டத்தட்ட 10,000 கோடிக்கு அந்த கம்பெனியில் வருஷத்துக்கு லாபம் வருவதா  இன்னைக்கு சொல்றாங்க….  அப்படி லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்ற ஒரு நிறுவனம்,  இங்குள்ள சில அரசியல்வாதிகளை சரி கட்டிக்கொண்டு….  குறிப்பாக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  தான் அந்த நிறுவனத்திற்கு MD , சேர்மன் போல இருக்கு. ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார் என்கின்ற மாதிரி அவரின் செயல் தான் இன்றைக்கு அரசாங்கம் ஆடிக்கிட்டு இருக்கு. அவர் சொன்னாதான் எதுவும் நடக்கும் என்ற மாதிரி…. கம்பெனியும் கேட்கும் என்ற மாதிரி இன்னைக்கு அவர்தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்கிறதா சொல்றாங்க…

அந்த மாதிரி இன்னைக்கு இருக்கிற நிலையில் இப்ப ஒரே ஒரு விஷயம் என்னன்னா….  ஒரு எக்ஸ்போர்ட் கமிட்டி. மக்கள் எதிர்பார்ப்பது என்ன ? மூடுங்க… மூடிட்டு, ஒரு  எக்ஸ்போர்ட் கமிட்டி போடுங்க. நியாயமானது தானே… எக்ஸ்போர்ட் கமிட்டி இந்த மாநிலத்தில் இருப்பவர்களை போட கூடாது ஏன்னா அரசுக்கு ஆதரவு கொடுப்பாங்க என தெரிவித்தார்.