
திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் மகனாக இருக்கக்கூடிய சூரியா சிவா கடந்தாண்டு பாரதி ஜனதா கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு என்பது கட்சியில் கொடுக்கப்பட்டு, அவர் அண்ணாமலையின் கீழ் நேரடியாக பணியாற்றி வந்தார்.
தொடர்ச்சியாக பாரதி ஜனதா கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்து, ஆறு மாதம் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து தான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அவர் நேரடியாக கடந்த டிசம்பர் என்று அறிவிப்பு வெளியிட்டு, பாஜகவை சேர்ந்த அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை கடுமையாக தாக்கி இருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு வருகின்ற நாலாம் தேதி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வார் என்று தகவல் பரவி இருக்க கூடிய நிலையில்,
அறிவிக்கை
திரு.சூர்யாசிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவருடைய… pic.twitter.com/YT6rylJhtK
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2023
பாரதிய ஜனதா கட்சியின் மீண்டும் அவருக்கு பதவி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. மாநில ஓ பி சி பிரிவின் மாநில செயலாளர் பிரிவில் மீண்டும் தொடர்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது அறிவிக்கை வாயிலாக தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் மீண்டும் BJP கட்சியில் இணைந்துள்ளார்.