
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, எனக்கு வேலை நிறைய இருக்கு. யாத்திரை இருக்கு. நீங்க விட்டது யாத்திரைக்கு ஓடனும். நிறைய வேலைகள் இருக்கு. ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்.யாரும் கோவாபாட்டாலும் சரி… நான் சொல்லி இருக்கின்றேன்… ஒன்பது ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்து விட்டோம். உங்கள் முன்னால் நின்றாள் நீங்கள் கேள்வி கேட்பீர்கள்..
ஃபர்ஸ்ட் கேள்வி நீங்க தான் கேப்பிங்க… தலைவா 9 வருஷம் என்ன பண்ணுனீங்க சொல்லுங்க… 10 வருஷம் ஆட்சில இருந்தீங்க என்ன பண்றீங்க சொல்லுங்க ? எல்லா நண்பர்களும் கேட்க தான் போறீங்க…. நாங்கள் ரிப்போர்ட் கார்டுடன் பதில் சொல்ல வேண்டும். இவ்வளவு செஞ்சிருக்கோம். இன்னும் ஐந்து வருஷம் குடுங்க செய்வோம் என சொல்லுவோம்.
திமுகவை கேள்வி கேட்கிறோம்…. முப்பது மாதமாக இருக்கீங்க? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். நீங்க என்ன செய்கிறீர்கள் ? நீங்கள் என்ன சரியா செய்யல ? எனவே மிச்ச கட்சி பத்தி பேசுறது அவ்வளவா ஸ்டாப் பண்ணிக்கிட்டேன். என்னுடைய நேரம் விரயம் என்று பார்க்கிறேன்.
அவரவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது. அவரவர்களுக்கு அவர்களுடைய கருத்து சரியாக இருக்கும். என்னை பொறுதவரை இன்னும் இருக்கக்கூடிய ஏழு மாத காலத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் ? என்று நான் தெளிவாக இருக்கிறேன். பாரதிய ஜனதா கட்சியும் தெளிவாக இருக்கு பாஜக கட்சியை பற்றிய விமர்சனத்துக்கு கண்டிப்பா பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. விமர்சனத்திற்கு பதில் சொல்ல கடமை இருக்கு. நீங்கஆட்சியை விமர்சனம் வையுங்கள்…. பத்தாண்டு காலமாக ஆட்சியை விமர்சனம் வையுங்கள்….
யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது முக்கியம் அல்லவா ? யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேட்கிற கேள்வியில் நியாயம் இருக்கணும்… தர்மம் இருக்கணும்…. ஒரு மாநில தலைவரா நான் பதில் கொடுக்கும்போது, அந்த மனிதர்களுக்கு தகுதி இருக்கணும். நிச்சயமாக யார் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால், நிச்சயமாக சொல்வேன். மத்தபடி அரசியலுக்காக பேசுறவங்க கிட்ட நான் என்ன சொல்வது ?
ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்கு தமிழகத்தில் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் தான் பெரும் பங்கு எடுத்து வேலை செய்கிறார். ஆர்.எஸ்.எஸ் கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றம், வளர்ச்சிக்கு முக்கியமாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.