கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தோழர்களே.. தந்தை பெரியாரும்,  புரட்சியாளர் அம்பேத்கரும் சனாதனத்தை  எதிர்த்து இந்த களத்தில் போராடிய போராளிகள். சனாதன என்பது ஆரியர்களின்  கோட்பாடு…  ஆரியர்கள் என்பது பார்ப்பனர்கள் தான். வேறு யாருமில்லை. பெரியார் காலத்திலே ஆரியம் என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருந்தது. பிறகு பெரியார் பார்ப்பனியம்  என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.

தமிழுக்கு பார்ப்பனியம் என்ற சொல் அரசியல் களத்திலே புழக்கத்தில் கொண்டு வந்தது பெரியார் தான்… பெரியாருக்கு பிறகு தான்…  அம்பேத்கர் வடக்கிலே பிராமனிஷம் என்று சொன்னார். பெரியார் அதை இங்கு பார்ப்பனியம் என்றார். சனாதனத்தில் முக்கியமான கோட்பாடு,  பாகுபாடு என்ன என்றால் ? பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு உண்டு, அதுதான் சனாதனம். சாமி கும்பிடுவது,  பொட்டு வைப்பது அல்ல சனாதனம், இது சடங்கு.

சடங்கு வேற சனாதனக் கோட்பாடு வேற…. ஆரத்தி எடுப்பது சனாதனம் கிடையாது, சாமி வேண்டி கொளவ்தோ, பூஜை போடுவதோ அல்ல சனாதனம். இவை எல்லாம் சடங்குகள், சம்பிரதாயங்கள். இது எல்லாம் நாமே உருவாக்கி கொண்டவை.

சனாதனம் கோட்பாடு என்பதின் அடிப்படைக் கொள்கை மாறாது தான். பிறப்பின்  அடிப்படையில் உயர்வு,  தாழ்வு மாறாதது. ஆணாக பிறப்பது இயற்கை….  பெண்ணாக பிறப்பது இயற்கை….  பெண்ணாக பிறப்பதினால் அவள்  ஆணுக்கு கீழானவர் என்பதுதான் சனாதனம். அக்ரஹாரத்தில் பிறப்பதினால் அவன் எவ்வளவு கீழ் குலம் உள்ளவனாக இருந்தாலும்…

புத்தி உள்ளவனாக இருந்தாலும்… அக்ரஹாரத்தில் பிறந்ததனால் அவர் உயர்ந்தவன். மற்ற அத்தனை பேரும் தாழ்ந்தவன். சத்திரியனாக இருந்து… நான் சத்ரியன் என பெருசாக மார்பை தூக்கிட்டு சொன்னாலும்  பார்ப்பானுக்கு கீழ் ஜாதி. நீ வைசியன் என சொல்லி கொண்டாலும், பார்ப்பானுக்கு கீழ் ஜாதி. நீ சூத்திரன் என்று  சொன்னாலும் பார்ப்பானுக்கு கீழ் ஜாதி, இதுதான் சனாதனம் என் பேசினார்.