
1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அமிர்தியா சென் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் பொருளாதார நிபுணர்களிலேயே மிகவும் மூத்தவர் மிகவும் மதிக்கப்படுபவர் அமிர்தியா சென். நோபல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச புகழ்களை பெற்றவர் அமிர்தியா சென். ஆகவே தான் அவர் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக கருதப்பட்டார்.இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும், அமெரிக்காவிலே வசித்து, அங்கேயே இருந்து தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்து வருகிறார்.
நாளந்தா பல்கலைக்கழகத்திலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் இருந்தன. ஆனால் மத்திய அரசுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக அவர் அந்த பொறுப்புகளை துறந்து விட்டு மீண்டும் அமெரிக்காவில் தன்னுடைய ஆராய்ச்சியை பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய சூழ்நிலையில், 89 வயதான அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என தகவல் பரவியது இந்நிலையில், பொருளாதார அறிஞர் அமிர்தியா சென் காலமானதாக தகவல் வெளியான நிலையில் அவரது மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
Friends, thanks for your concern but it’s fake news: Baba is totally fine. We just spent a wonderful week together w/ family in Cambridge—his hug as strong as always last night when we said bye! He is teaching 2 courses a week at Harvard, working on his gender book—busy as ever! pic.twitter.com/Fd84KVj1AT
— Nandana Sen (@nandanadevsen) October 10, 2023