கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வசித்து வரும் 35 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

அந்த இளைஞரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தோழி வீடான தொட்ட நகர மங்கலம் அருகே உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் பகுதிக்கு நேரில் பார்ப்பதற்காக அழைத்துள்ளார். அங்கு தோழியின் வீட்டில்  இருவரும் சந்தித்தபோது திடீரென 2 நபர்கள் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணிடமிருந்து 2 நபர்களும் ரூபாய் 20000 பணத்தை மிரட்டி தங்களது வங்கி கணக்குகளுக்கு டெபாசிட் செய்துள்ளனர். அந்த டெபாசிட் பணத்தை ஒரு பந்தயச் செயலி கணக்கில் 2 நபர்களும் டெபாசிட் செய்து உள்ளனர்.

மேலும் அந்தப் பெண்ணின் தோழியின் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின், டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி அந்தப் பெண்ணின் 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பரப்பன அக்ரஹாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளான ரகு (24), கெஞ்சை கவுடா (26), மாதேஷ்(27), சசிகுமார் (24) ஆகிய 4 பேர் என கண்டறிந்தனர்.

இதனை அடுத்து அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில் குற்றவாளிகள் அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பருக்கு பழக்கமானவர்கள், இச்செயல் முன்கூட்டியே திட்டமிட்டுள்ள செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.