நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகரில் இருக்கும் வாணி மகாலில் சாருகேசி நாடகத்தை ரஜினிகாந்த் கண்டுகளித்தார். இதன் பின் பேசிய அவர், தற்போது எனக்கு 73 வயதாகிறது. இந்த வயதில் நான் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கின்றேன் என்பதற்கு காரணம் என்னுடைய மனைவிதான்.

நடத்துனராக இருந்தபோது சில கெட்ட பழக்கங்கள் வந்தது. நடத்துனராக இருந்தபோதே நான் தினசரி இரண்டு வேலை அசைவம் சாப்பிடுவேன். தினமும் மது குடிப்பேன். சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது. சைவம் சாப்பிடுபவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும். ஆடு, மாடு சாப்பிடும் இதை எப்படி இவர்கள் சாப்பிடுகிறார்களோ என எண்ணுவேன்.

ஆனால் அதை தற்போது நான் மாற்றி இருக்கின்றேன். சிகரெட், மது, நான்வெஜ் உள்ளிட்டவை மிகவும் மோசமான கலவை. இதுபோல இருந்த என்னை எனது மனைவி அன்பால் மாற்றியுள்ளார். திருமணத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி இருக்கின்றேன் என்பதை எனது திரைப்படங்களை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.